செய்தி விளையாட்டு

Womens WC – 231 ஓட்டங்கள் குவித்த நியூசிலாந்து அணி

  • October 6, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் மத்தியபிரதேசத்தின் இந்தூரில் இன்று நடைபெற்று வரும் 7வது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து தொடக்க வீராங்கனைகளாக சுசி, ஜார்ஜியா களமிறங்கினர். போட்டியின் முதல் பந்திலேயே சுசி ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஜார்ஜியா 31 ஓட்டங்களும் அமிலியா 23 […]

பொழுதுபோக்கு

விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு

  • October 6, 2025
  • 0 Comments

நடிகர் விஜய் தேவரகொண்டா பயணித்த கார் தெலங்கானாவில் விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் தேவரகொண்டாவுக்கு தமிழிழும் அதிக ரசிகர்கள் இருக்கின்றார்கள். இவருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கும் இடையில் காதல் உறவு இருப்பதாகவும், அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் தகவல் உலா வருகின்றன. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் உந்தவல்லி என்ற பகுதியில் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியது. ஆடுகளை ஏற்றி வந்த ட்ரக் ஒன்று, […]

ஐரோப்பா

ரஷ்ய எண்ணெய் முனையம், வெடிமருந்து கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்

  • October 6, 2025
  • 0 Comments

ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் முனையம் மற்றும் வெடிபொருள் தொழிற்சாலையை ட்ரோன் மூலம் தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு ரஷ்யாவில் உள்ள நிஸ்னி நோவ்கோரோடு மாகாணத்தில் உள்ள ஸ்வெர்ட்லோவ் வெடிபொருள் தொழிற்சாலை தாக்கப்பட்டதாக உக்ரைன் ஜெனரல் ஸ்டாஃப் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளுக்கு வெடிபொருட்கள் வழங்கும் முக்கிய தொழிற்சாலைகளில் ஒன்றாக இந்த தொழிற்சாலை திகழ்ந்து வருகிறது. உக்ரைன் ட்ரோன் மூலம் கிரிமியாவில் உள்ள எண்ணெய் முனையத்தைத் தாக்கியதாகவும், கிரிமியா உள்பட 14 மாகாணத்தில் தாக்குதல் நடத்தியதை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. […]

கருத்து & பகுப்பாய்வு

AI தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்படும் சிகிச்சை முறை – உரிமையை கைப்பற்றிய அஸ்ட்ராஜெனகா!

  • October 6, 2025
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற்ற சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட பிரபல நிறுவனமான அல்ஜென் (Algen) உடன் அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca) நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. சுமார் $555 மில்லியன் பெறுமதியான இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தளத்தைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்படும் மரபணு சிகிச்சைகளை உருவாக்குவதற்கும், அதனை  வணிகமயமாக்குவதற்குமான பிரத்தியேக உரிமத்தை  அஸ்ட்ராஜெனெகாவிற்கு (AstraZeneca) வழங்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், நோயெதிர்ப்பு அமைப்பு தொடர்பான கோளாறுகளை இலக்காகக் கொண்ட சிகிச்சைகளை உருவாக்குவதற்கான பிரத்தியேக […]

இலங்கை

இலங்கை தொடர்பில் ஐநாவில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

  • October 6, 2025
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60வது கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இலங்கை தொடர்பாக இன்று 6ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் எனும் தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணை அனுசரணை நாடுகளால் கடந்த மாத ஆரம்பத்தில் இந்த பிரேரணையின் முதலாவது வரைவு சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்நிலையில் திருத்தப்பட்ட இறுதி வரைவு இன்றைய தினம் 06ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு இன்றைய […]

பொழுதுபோக்கு

திருமணம் செய்யாமலே இரு குழந்தைகளுக்கு தாயான நடிகை : இறுதியில் நடந்த சோகம்

  • October 6, 2025
  • 0 Comments

கன்னட நடிகை பாவனா ராமண்ணா திருமணம் செய்யாமலே கர்ப்பமாகி குழந்தைக்கு தாயாகி உள்ளார். ஆனால், பிறந்த குழந்தை பிறந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்ததால் சோகத்தில் அழுது புலம்பினார். இவர் தமிழில் மோகன் நடிப்பில் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் அறிமுகமாகி பிரசாந்தின் விரும்புகிறேன், நட்சத்திர காதல், ஆஹா எத்தனை அழகு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 40 வாயதாகும் பாவனா ராமண்ணாவிற்கு திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால், குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும், தாய்மையின் அழகை […]

இலங்கை

இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம்!

  • October 6, 2025
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஒரு தொகைப்பணத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 760 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் உட்பட ஒரு தொகைப்பணமும் குறித்த சந்தேக நபரிடமிருந்து மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பெரிய நீலாவணை- வீ.சி.வீதியைச்சேர்ந்த 36 வயதுடையவர் எனவும் இதற்கு முன்னரும் இச்சந்தேக நபர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கல்முனை தலைமையக […]

உலகம்

புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மையைக் கண்டுபிடித்ததற்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு

  • October 6, 2025
  • 0 Comments

இவ்வாண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு ஜப்பானைச் சேர்ந்த மருத்துவர் ஷிமோன் சகாகுச்சி, அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல் ஆகிய மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த அவர்களின் கண்டுபிடிப்புக்காக இப்பரிசு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளியல் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியோருக்கும் அமைதிக்காகப் பாடுபட்டவர்களுக்கும் உலகளவில் உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு திங்கட்கிழமை (6) அறிவிக்கப்பட்ட […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று – வீட்டு வைத்தியம் எடுத்துக்கொள்வோருக்கு எச்சரிக்கை!

  • October 6, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் சில பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபுகள் வேகமாக பரவி வருகின்ற நிலையில், மக்கள் வீடுகளில் சிகிச்சை எடுப்பதற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் XFG மற்றும் XFG.3 தொற்றுக்களின் புதிய திரிபுகள் பரவி வருகின்றன. அதேபோல் ஸ்ட்ராடஸ் (Stratus) மற்றும் நிம்பஸ் ( Nimbus ) (NB. 1.8. 1) போன்ற தொற்றுக்களும் பரவலாக காணப்படுகின்றன. இந்நிலையில் இந்த தொற்றால் உடலில் ஏற்படும் கடுமையான வலிக்கு வீட்டிலேயே சிகிச்சை […]

இலங்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மாயமான புறாக்கள் – பொறுப்பாளர் பணியிடைநீக்கம்!

  • October 6, 2025
  • 0 Comments

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருடப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பறவைகள் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் (03) திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பில் அப்பிரிவின் பொறுப்பதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்தவித  தகவலும் கிடைக்கவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெஹிவளை பொலிஸார் […]