உலகம்

கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தம் ; இஸ்ரேல் மற்றும் காசாவில் மகிழ்ச்சி

  • October 9, 2025
  • 0 Comments

காசா போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் ஏற்பட்ட செய்தியை அறிந்ததும் பாலஸ்தீன மக்களும் இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் குடும்பங்களும் இன்று (9) கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முயற்சியின் முதல் கட்டமாக, பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், துப்பாக்கிச் சூட்டை நிறுத்துவதற்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் இஸ்ரேலும் பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸும் இன்று (9) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. எகிப்திய கடற்கரை ரிசார்ட்டான ஷார்ம் எல்-ஷேக்கில் […]

பொழுதுபோக்கு

உச்சகட்ட பரபரப்பில் பிக்பாஸ்… திவாகருக்கு நடந்த விபரீதம்

  • October 9, 2025
  • 0 Comments

பிக்பாஸ் என்றாலே எப்போது ஆரம்பிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அது ஏன் என்றால் வீட்டுக்குள் இடம்பெறும் சண்டைகள், கொசிப்ஸ் மற்றும் அவர்களின் சுயரூபம் எப்போது வெளிவரும் என்பதை பார்ப்பதற்குத்தான். இப்படியிருக்க விஜய் டி.வியில் பிக்பாஸ் தமிழ் சீசன் 9ஆரம்பிக்கப்பட்டு 4 நாட்கள் கடந்துவிட்டன. மற்றைய சீசன்களைவிட இம்முறை பிக்பாஸ் வீடு பல சர்ச்சைகளை எதிர்கொண்டுள்ளது. அகோரி, கிளேமர், இரட்டை அர்த்த நாயகிகள், யூடியூப் பிரபலங்கள் உட்பட அனைத்து போட்டியாளர்களும் ஒரு மார்க்கமாகவே இருக்கின்றார்கள். அதிலும் ஆரம்பிக்கப்பட்ட […]

ஐரோப்பா

அடுத்த வார தொடக்கத்தில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யும் உக்ரைன் தூதுக்குழு

  • October 9, 2025
  • 0 Comments

ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி இன்று(09) ஒரு குழு அடுத்த வார தொடக்கத்தில் உக்ரைனிலிருந்து அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமூக ஊடகமான Xல் ஜெலென்ஸ்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தக் குழு பிரதமர் யூலியா ஸ்வைரிடென்கோ தலைமையில் செயல்படும் என்றும், உக்ரைனின் ஜனாதிபதி அலுவலகத்தின் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் மற்றும் தடைகள் கொள்கை ஆணையர் விளாடிஸ்லாவ் விளாசியுக் ஆகியோர் இதில் இடம்பெறுவார்கள் என்றும் கூறினார். நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை வான் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் தடை நடவடிக்கைகள் ஆகிய […]

இந்தியா

இந்தியாவில் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – ஒருவர் கைது!

  • October 9, 2025
  • 0 Comments

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் குறித்த மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று  அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்திய சோதனைகளில் இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் […]

இலங்கை

இலங்கை – வீட்டை விட்டு வெளியேறிய இரு சிறுவர்கள் மாயம்!

  • October 9, 2025
  • 0 Comments

கண்டி, தென்னகும்புர பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காணாமல்போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றை தினம் (08.10) அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் மாயமானதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குறித்த சிறுவர்களின் தாயார் இந்திரமணி காவல்துறையினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். தென்னகும்புரவில் மகாவலி ஆற்றின் பக்கம் இரண்டு சிறுவர்களும் செல்வதைக் கண்டதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டு  காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  

ஐரோப்பா

பிரித்தானியாவில் கடும் சிக்கலில் உள்ள தேசிய சுகாதார சேவை – ஆபத்தில் நோயாளிகள்!

  • October 9, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்துள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை (NHS) மருந்துகளை பெற்றுக்கொள்ள 25 சதவீதம் அதிகளவில் செலவழிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இது வரவு செலவு திட்டத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும்  எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் தேசிய சுகாதார சேவையின் உதவிகளை பெற காத்திருக்கும் நோயாளிகள் பெருமளவு பாதிக்கப்படுவார்கள் என முன்னணி சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த சூழ்நிலையை கையாள பிரித்தானிய அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து […]

பொழுதுபோக்கு

ஹிஜாப் அணிந்து சென்று சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோன்

  • October 9, 2025
  • 0 Comments

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோன் குறித்த செய்திகள் தான் தற்போது வைரலாகி வருகின்றது. இவர்கள் இருவரும் புகழ்பெற்ற ஷேக் சயீத் கிராண்ட் மசூதிக்கு விளம்பரத்திற்காக செல்லும் போது ரன்வீர் சிங் ஷெர்வானி போன்ற ஒரு உடையிலும் தீபிகா படுகோன் உடல் முழுவதும் ஹிஜாப் போன்ற ஒரு உடையில் முகம் மட்டும் தெரிந்தபடி அணிருந்திருந்தார். இந்த உடையை அபயா என்றும் கூறப்படுகிறது. இது தற்போது சமூக வலைதளத்தில் கிண்டலுக்கும் […]

பொழுதுபோக்கு

பாபாஜி குகையில் தியானத்தில் மூழ்கினார் ரஜினிகாந்த்

  • October 9, 2025
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 4ஆம் திகதி முதல் இமயமலை பயணம் மேற்கொண்டார். முதலில் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் தங்கி பின்பு பத்ரிநாத் சென்றார். பத்ரிநாத் செல்லும் வழியில் சாலையோரம் அவர் சாப்பிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இதனைத் தொடர்ந்து தற்போது பாபாஜி குகைக்கு சென்றுள்ளார். அங்கு போகும் முன் அவருக்கு பாபாஜி சிலை பரிசாக வழங்கப்பட்டது. பின்பு குகைக்கு சென்று தியானம் மேற்கொண்டார். ரஜினிகாந்த் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பும் இமயமலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக […]

உலகம்

‘அபோகாலிப்டிக் பேரழிவை’ எதிர்கொண்டதற்காக ஹங்கேரிய நாவலாசிரியருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு

  • October 9, 2025
  • 0 Comments

உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரும், திரைக்கதை ஆசிரியருமான லாஸ்லோ கிராஸ்னாஹோர்கை என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. முதல் நோபல் பரிசுகள் 1901 ஆம் ஆண்டு வழங்கப்பட்டன. […]

இலங்கை

இலங்கை – ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க தீர்மானம்!

  • October 9, 2025
  • 0 Comments

இலங்கையில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி  அமைச்சர் டாக்டர் சந்தன அபயரத்ன தெரிவித்துள்ளார். 2026ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் இதற்கான யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். “ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை” என்ற தலைப்பில் ஓய்வூதியத் துறை ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஓய்வு […]