உலகம்

காசாவுக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட தயாராகும் ட்ரம்ப்

  • October 9, 2025
  • 0 Comments

காசாவுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா சமாதானத்திற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். காசாவுக்கான விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சமாதான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்த நாடாக செயற்படும் எகிப்திற்கு, டொனால்ட் ட்ரம்ப் முதலில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, ட்ரம்ப் […]

இலங்கை

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து – செந்தில் தொண்டமான் கண்டனம்!

  • October 9, 2025
  • 0 Comments

மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தேயிலை தொழிற்சாலை என்பது எமது மக்களின் வாழ்வாதாரம் என்பதோடு, அது எமது அடையாளம் எனவும்,அதை பாதுக்காக்க வேண்டிய பொறுப்பு கம்பனிகளுக்கு உள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேயிலை தொழிற்சாலை தீக்கிரையாகியுள்ள நிலையில் இதற்கு தொழிற்சாலை பொறுப்பதிகாரிகள், கம்பனியினரின் தான்தோன்றி தனமே […]

பொழுதுபோக்கு

பிரபல நடிகருக்கு எமனாக வந்த நாய்…

  • October 9, 2025
  • 0 Comments

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய பிரபல பாடகரும் – நடிகருமான ராஜ்வீர் ஜவாண்டா உயிரிழந்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பட்டி எனும் இடத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி, இவர் பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில் தலை மற்றும் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இவருடைய உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்ததை தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் ராஜவீரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து போராடி வந்தனர் . […]

உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர்

  • October 9, 2025
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையிலான புதிய சமாதான ஒப்பந்தத்தை ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார். அமெரிக்கா முன்வைத்த சமாதான திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ஐ.நா பொதுச் செயலாளரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதை உறுதி செய்யும் ஒப்பந்தத்தை வரவேற்பதாக பொதுச்செயலாளர் கூறினார். ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்றவும், அனைத்து பணய […]

விளையாட்டு

15 ஆண்டுகளுக்குப் பிறகு மஹேலவின் இடத்தைப் பிடித்த பெத்தும் நிஸ்ஸங்க

  • October 9, 2025
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்டுள்ள ரி-20 துடுப்பாட்ட தர வரிசை பட்டியலுக்கு அமைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தைப் பிடித்துள்ளார். அதற்கமைய, சமீபத்திய காலங்களில் இலங்கை வீரர் ஒருவர் பதிவு செய்த மிக உயர்ந்த தரவரிசை நிலையை பெத்தும் தக்க வைத்துள்ளார். இந்த தரவரிசைப்படி, 789 புள்ளிகளைக் கொண்ட பெத்தும் கடந்த தரவரிசையில் இருந்து 10 புள்ளிகள் அதிகரித்து, இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை பின் தள்ளியுள்ளார். […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை

  • October 9, 2025
  • 0 Comments

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு பெற்றுக்கொள்கின்றார். எனினும் அவ்வாறு வாகனங்கள் பெற்றுக் கொள்ளும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். இணையவழி ஊடாக வாகனங்களை வாடகைக்கு வழங்கும் போர்வையில் பல நிதி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனங்களை வாடகைக்கு எடுக்கும் போது நிறுவனம் குறித்து நன்கு ஆராய்ந்து அதற்குப் பின்னர்  வாகனங்களை வாடகைக்கு எடுக்குமாறு பொலிஸார் […]

தமிழ்நாடு

விஜய்க்கு ஆறுதல் கூறிய பழனிசாமி! ஜனவரியில் கூட்டணி குறித்து உடன்பாடு?

  • October 9, 2025
  • 0 Comments

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தவெக தலைவர் ஜோசப் விஜயுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கரூரில் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் விஜய் மனமுடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தம் காரணமாக வீட்டை விட்டு வெளியில் வருவதையும், கட்சி நிர்வாகிகளை சந்திப்பதையும் விஜய் தொடர்ந்தும் தவிர்த்து வருகிறார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் அறிவித்துள்ள நிலையில், அதையும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து வழங்க […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் தீப்பிடித்தமையால் பதற்றம்

  • October 9, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தபோது ரெக்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்துள்ளது. எரிபொருள் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், விமானம் காலையில் ப்ரோக்கன் ஹில்லுக்கு பறக்கத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இயந்திரத்தில் இருந்து தீப்பிழம்புகள் வருவதைக் கண்ட விமானி பிரேக்குகளைப் பயன்படுத்தி புறப்படுவதை நிறுத்தியுள்ளார். மூளை அறுவை சிகிச்சை செய்து திரும்பிய ஒருவர் உட்பட, தீயைக் கண்ட பயணிகள் பீதியடைந்தனர். தீ விபத்தின் பின்னர் பயணிகள் மற்றும் பணியாளர்கள் […]

உலகம்

அமெரிக்காவில் ChatGPTயிடம் பாடசாலை மாணவன் கேட்ட கேள்வியால் அதிர்ச்சியில் அதிகாரிகள்

  • October 9, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பாடசாலையில் படிக்கும் மாணவர் ஒருவர் தனது நண்பரை கொலை செய்வது தொடர்பில் ChatGPTயிடம் ஆலோசனை கேட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 13 வயதுடைய மாணவர் ஒருவர் வகுப்பறையில் இருக்கும் போது “என் நண்பரை எப்படிக் கொல்வது” என்று OpenAI-யின் ChatGPT செயலிக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். Gaggle எனப்படும் பாதுகாப்பு மென்பொருள் உடனடியாக அது தொடர்பில் முறைப்பாடு செய்து, பின்னர் மாணவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார். விளையாட்டாக அவ்வாறு செய்ததாக குறித்த […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் பரவும் கொடிய பாக்டீரியா – மக்களுக்கு எச்சரிக்கை

  • October 9, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் மக்களிடையே ஒரு கொடிய பாக்டீரியா பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ரெப்டோகாக்கஸ் டிஸ்கலாக்டியே கிளையினங்கள் ஈக்விசிமிலிஸ் (Streptococcus dysgalactiae subspecies equisimilis) என அழைக்கப்படும் இந்த பாக்டீரியா, தோல் வழியாக பரவி சிறிய காயங்களை ஏற்படுத்துவதுடன், பின்னர் கடுமையான நோய்களாக மாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சருமத்தைப் பாதிக்கும் இந்த பாக்டீரியா, இரத்தத்தின் மூலம் உடலின் முக்கிய உறுப்புகளுக்குள் பரவி, கடுமையான நிலையை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக குறைந்த நோய் […]