இந்தியா செய்தி

நேபாள சிறையில் இருந்து தப்பியோடிய பாகிஸ்தான் பெண் திரிபுராவில் கைது

  • October 12, 2025
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தானிய நாட்டவர் மற்றும் நேபாள சிறையில் இருந்து தப்பியோடிய 65 வயது பெண் ஒருவர் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள சப்ரூம் என்ற எல்லை நகரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். லூயிஸ் நிகாத் அக்தர் பானோ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், சப்ரூம் புகையிரத நிலைய காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டதாக சப்ரூம் காவல் அதிகாரி நித்யானந்தா சர்க்கார் தெரிவித்துள்ளார். “அவர் எல்லையில் வங்கதேசத்திற்கு […]

செய்தி விளையாட்டு

Women’s WC – இந்தியாவுக்கு எதிராக சாதனை வெற்றியை பதிவு செய்த ஆஸ்திரேலியா

  • October 12, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13வது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய இந்திய அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களை இழந்து 330 ஓட்டங்களை பெற்றது. இந்திய அணி சார்பில் ஸ்மிருதி (Smriti Mandhana) 80 ஓட்டங்களும் பிரதிகா (Pratika Rawal) 75 ஓட்டங்களும் பெற்றுக்கொடுத்தனர். இதையடுத்து, 331 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹமாஸ் தாக்குதலில் காதலியை இழந்த இஸ்ரேலிய நபர் தற்கொலை

  • October 12, 2025
  • 0 Comments

இஸ்ரேலில் அக்டோபர் 7, 2023 அன்று நடந்த இசை விழா மீதான ஹமாஸ் தாக்குதலில் இருந்து தப்பிய ஒரு இஸ்ரேலிய நபர், தாக்குதலின் இரண்டாவது ஆண்டு நினைவு தினத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 28 வயதான ரோய் ஷாலேவ், தனது காதலி 25 வயது மாபல் ஆடம் (Mapal Adam) மற்றும் அவரது நண்பர் ஹிலி சாலமனை (Hili Solomon) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதலில் இழந்தார். இந்நிலையில், இஸ்ரேலின் நெதன்யா […]

இந்தியா செய்தி

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் ஆக்ரா பயணம் ரத்து

  • October 12, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகியின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரத்து செய்யப்பட்டதற்கான எந்த காரணத்தையும் அதிகாரிகள் குறிப்பிடவில்லை. மேலும், முத்தாகியின் ஆக்ரா பயணம் ரத்து செய்யப்பட்டதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. தாஜ்மஹாலைப் பார்க்க ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஆக்ராவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பயணம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. பல தடைகளை தாண்டி 6 நாள்கள் பயணமாக ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி வியாழக்கிழமை இந்தியா வந்தடைந்தார். இந்த […]

ஐரோப்பா செய்தி

வரலாற்று சிறப்புமிக்க இத்தாலிய மடாலயத்தில் தீ விபத்து

  • October 12, 2025
  • 0 Comments

வடக்கு இத்தாலியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பெர்னாகா மடாலயத்தில் ஒரு பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது. சம்பவத்தை தொடர்ந்து 22 கன்னியாஸ்திரிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 1628ம் ஆண்டு நிறுவப்பட்ட மிலனுக்கு அருகிலுள்ள லா வாலெட்டா பிரையன்சாவில் உள்ள மடாலயத்தில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கன்னியாஸ்திரிகள் காயங்கள் இல்லாமல் வெளியேற்றப்பட்டனர், ஆனால் பல விலைமதிப்பற்ற கலைப்படைப்புகள் அழிந்து போனதாக இத்தாலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. லா வாலெட்டா பிரையன்சாவின் மேயர் மார்கோ பன்செரி, […]

இலங்கை செய்தி

இலங்கை: நாரம்மல பகுதியில் நடந்த சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் மரணம்

  • October 12, 2025
  • 0 Comments

நாரம்மல (Narammala), அலஹிடியாவ (Alahitiyawa) சாலையில் நடந்த வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். லாரி ஒன்று வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பம் மீது மோதி சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்தின் விளைவாக, லாரியின் பின்புறத்தில் பயணித்த இருவர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். பின்னர் அவர்கள் நாரம்மல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் வவுனியா மற்றும் நெடுங்கேணியைச் சேர்ந்த 26 மற்றும் 29 வயதுடையவர்கள் என […]

இந்தியா செய்தி

இந்தியா-வங்கதேச எல்லையில் 2.82 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க பிஸ்கட்கள் பறிமுதல்

  • October 12, 2025
  • 0 Comments

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள இந்தியா-வங்காளதேச எல்லைக்கு அருகே தங்க பிஸ்கட் கடத்தல்காரர் ஒருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) கைது செய்யப்பட்டுள்ளார். முஸ்லிம்பாரா கிராமத்தைச் சேர்ந்த ஒரு இந்தியர், வங்காளதேசத்திலிருந்து ஹொரண்டிபூர் பகுதி வழியாக கொண்டு வரப்பட்ட சட்டவிரோத தங்கத்தை கடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து ​​சுமார் 2.82 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 தங்க பிஸ்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட […]

ஐரோப்பா செய்தி

ஸ்பெயினில் நடந்த தீவிர வலதுசாரி பேரணியில் 17 பேர் கைது

  • October 12, 2025
  • 0 Comments

ஸ்பெயினின் வடக்கு நகரமான விட்டோரியாவில் முன்னாள் சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் பாசிச ஆதரவாளர்கள் எதிர்ப்பாளர்களுடன் மோதியதை அடுத்து 17 பேரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மரணத்தின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாகவும், அவரது 1939-1975ம் ஆண்டு ஆட்சியின் மரபை எதிர்த்துப் போராடும் விதமாகவும் ஒரு பேரணி திட்டமிடப்பட்டிருந்தது. விட்டோரியாவில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி இருந்த நிலையில் முகமூடி அணிந்த எதிர்ப்பாளர்கள் பேரணியில் நுழைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மோதலில் பொருட்களை வீசி எறிந்து, […]

பொழுதுபோக்கு

இப்படி மாட்டிக்கிட்டியே பங்கு… சிறகடிக்க ஆசை பரபரப்பு ப்ரோமோ

  • October 12, 2025
  • 0 Comments

சீரியல்கள் என்றாலே பெண்கள் பார்க்கும் காலம் போய், தற்போது பெண்களுக்கு இணையாக ஆண்களும் சீரியல்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. அதிலும் சன்டிவி, விஜய் டிவி சீரியல்கள் தான் அதிகம் மக்கள் மத்தியில் பெரிதும் பார்க்கப்படுகின்றது. இதில், இரு செனல்களும் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்புவார்கள். இதில் சன்டிவி தான் டாப்பில் இருக்கும். ஆனால் சன்டிவி சீரியலுக்கும் டாப் கொடுக்கும் விஜய் டிவியின் ஒரே ஒரு சீரியல் தான்  “சிறகடிக்க ஆசை”. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் […]

செய்தி விளையாட்டு

INDvsWI Test – மூன்றாம் நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி

  • October 12, 2025
  • 0 Comments

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. நாணய சுழற்சியை வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தார். அந்தவகையில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 518 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் […]