இலங்கை செய்தி

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுரஞ்சித் வேவித்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய தலைவராக சுரஞ்சித் வேவித்த நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2024 அக்டோபர் முதல் அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றி வந்த புத்திக ஹேவாவசம், தனிப்பட்ட மற்றும் தொழிற்துறை சார்ந்த காரணங்களால் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தில், சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றியது தனக்குக் கிடைத்த பாக்கியம் என்றும், தனது பதவிக் காலத்தில் இலங்கை சாதனை அளவிலான சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்ததையும், பல சர்வதேச விருதுகளைப் பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அதிகார சபை மற்றும் நாட்டின் நலனை கருத்திற்கொண்டு , புதிய தலைமைத்துவத்திற்குச் சீரான அதிகாரப் மாற்றத்திற்குத் தேவையான முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை