உலகம்

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – விரிவடையும் ட்ரம்பின் அதிகாரங்கள்

  • June 29, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. சுதந்திரமான கூட்டாட்சி அமைப்புகளின் தலைவர்களை ஜனாதிபதி பணிநீக்கம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவருடைய அதிகாரங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தீர்ப்பானது 91 ஆண்டுகால பழைமையான சட்ட விதியை மாற்றியமைத்துள்ளது. அதேநேரம் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பானது தேசிய தொழிலாளர் உறவுகள் வாரியம் மற்றும் நுகர்வோர் நிதிப் பாதுகாப்புப் பணியகம் உள்ளிட்ட மேலும் பன்னிரண்டு சுதந்திரமான அமைப்புகளுக்கு  குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.  

உலகம்

ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டியை சேர்க்க தீர்மானம்

  • June 29, 2026
  • 0 Comments

2028 ஒலிம்பிக் போட்டிகளில் இம்முறை  கிரிக்கெட் போட்டி சேர்க்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இப்போட்டியில் ஆறு ஆண்கள் மற்றும் ஆறு பெண்கள் அணிகள் போட்டியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டம் வாரியாக டி20 தரவரிசையில் முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் அணிகள் இப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறாவது அணிக்கான தகுதிச் சுற்றுப் போட்டி 2027 ஆம் ஆண்டு நடைபெறும். அதேநேரம் போட்டியை நடத்தும் நாடான அமெரிக்கா, ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிக்குத் தகுதி […]

ஐரோப்பா

ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு : நீண்ட வரிசையில் மக்கள்

  • June 29, 2026
  • 0 Comments

உக்ரைனில் நடக்கும் போர் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தொடர்ந்து சீர்குலைத்து வருவதால், ரஷ்யா ஒரு வளர்ந்து வரும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலைமையை கையாள்வது தொடர்பில் இன்றைய தினம் புட்டின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது  எரிபொருள் பற்றாக்குறையை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதோடு, உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்த டீசல் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனில் இயங்கினாலும், எரிபொருள் […]

உலகம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

  • June 29, 2026
  • 0 Comments

வளைகுடாப் பகுதியில் நிலவும் அமைதியின்மையால் உலகளாவிய பணவீக்கம் உயரக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக தங்கத்தின் விலை சரிந்துள்ளது. இந்த பணவீக்க அச்சங்கள் காரணமாக, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மேலும் உயர்த்தும் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் வட்டி வருமானம் ஈட்டாத தங்கம் போன்ற உலோகங்களுக்கான தேவையைக் குறைத்துள்ளது. அதன்படி, உலக சந்தையில் தங்கத்தின் உடனடி விலை 0.9 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸுக்கு 4,049.90 அமெரிக்க டொலராகக் குறைந்தது. மேலும், ஆகஸ்ட் மாதத்திற்கான தங்கத்தின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஜப்பானில் முதல் முறையாக கடமையில் இணைக்கப்பட்டுள்ள AI காவல்துறை அதிகாரி

  • June 29, 2026
  • 0 Comments

மோசடி குற்றங்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுதும் நோக்கில் ஜப்பானிய அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு காவல்துறைத் தலைவரை நியமித்துள்ளது. AIko என்று அழைக்கப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோ, ஒசாகா மாகாண காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பமானது  நூதனமான முறையில் மோசடியில் ஈடுபடுவர்களை குறிவைக்கிறது. AIko, ஒரு இளம் பெண்ணின் முகம் மற்றும் குரலுடன் யூடியூபில் தோன்றி, காணொளி அழைப்பில் தன்னை ஒரு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடி குறித்த எச்சரிக்கை செய்திகளை வழங்குகிறது. முதலீட்டு மோசடிகள், […]

லெபனான் இராணுவத் தளபதி General Rodolph Haykal மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தளபதி Admiral Brad Cooper ஆகியோருக்கிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. உலகம் செய்தி

லெபனான் ராணுவ தளபதியை அவசரமாக சந்தித்த அமெரிக்க தளபதி

  • June 29, 2026
  • 0 Comments

லெபனான் இராணுவத் தளபதி General Rodolph Haykal மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் தளபதி Admiral Brad Cooper ஆகியோருக்கிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பெய்ரூட்டின் தெற்கே உள்ள யார்சே (Yarze) நகரில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் (NNA) செய்தி வெளியிட்டுள்ளது. லெபனான் மற்றும் மத்திய கிழக்கின் பாதுகாப்புச் சூழல் குறித்தும், இரு நாடுகளின் இராணுவங்களுக்கு இடையிலான கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்தும் இந்த உயர்நிலை ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது. தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடக சட்டங்களை பின்பற்றாத நிறுவனங்களுக்கு இரட்டிப்பு அபராதம்

  • June 29, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை அணுகுவதற்கான சட்டவிதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு அபராதங்களை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிகபட்ச அபராதம் இப்போது 99 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களாக  அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்புடைய அறிவிப்பை  பிரதமர் அந்தோனி அல்பானீஸின் (Anthony Albanese) அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், முறையான மீறல்களுக்கான அபராதம் 49.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களிலிருந்து 99 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களாக உயர்ந்துள்ளது. “உலகிலேயே […]

வாஷிங்டனில் கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்தை லெபனானைச் சேர்ந்த சன்னி அமைப்புகள் Sunni groups வன்மையாகக் கண்டித்துள்ளன. உலகம் செய்தி

வாஷிங்டன் ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது; லெபனான் Sunni குழுக்கள் திட்டவட்டம்

  • June 29, 2026
  • 0 Comments

வாஷிங்டனில் கையெழுத்தான முத்தரப்பு ஒப்பந்தத்தை லெபனானைச் சேர்ந்த சன்னி அமைப்புகள் Sunni groups வன்மையாகக் கண்டித்துள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களை களைவதோடு இஸ்ரேலியப் படைகளின் வெளியேற்றத்தை இணைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனை என்று இந்த குழுக்கள் வாதிடுகின்றன. இந்த ஒப்பந்தம் லெபனான் ராணுவத்தின் செயல்பாடுகளில் இஸ்ரேல் தலையிட வழிவகுப்பதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். லெபனானுக்குள் இந்த விவகாரம் பெரும் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தரப்பினர் இதனை அமைதிக்கான வாய்ப்பாகப் பார்த்தாலும், மற்றவர்கள் இதனை அமெரிக்கா மற்றும் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

அடுத்த மாதமும் வெப்ப அலை தொடரும் : எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

  • June 29, 2026
  • 0 Comments

வரலாறு காணாத வெப்ப அலையின் தாக்கத்தை இத்தாலியும் பால்கன் பகுதிகளும் இன்று உணர்ந்ததாக அறிவித்துள்ளன. இந்த வெப்ப அலை நூற்றுக்கணக்கான கூடுதல் மரணங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், ஒரு வாரத்திற்கும் மேலாக கண்டம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கையை  சீர்குலைத்துள்ளது. இந்த வெப்ப அலையினால் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. அதேநேரம் இந்த பகுதிகளில் அடுத்த வாரம் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இத்தாலியில், வடக்கில் உள்ள போல்சானோ முதல் தெற்கில் உள்ள […]

ஹம்பர்க் (Hamburg) நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஸ்டேட் (Stade) நகரம், சுமார் 50,000 மக்கள் தொகையைக் கொண்ட ஒரு பகுதியாகும். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஐவர் சுட்டுக்கொலை: வடக்கு ஜெர்மனியில் பயங்கரம்

  • June 29, 2026
  • 0 Comments

வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் (Stade) நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். திங்கட்கிழமை நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும், இந்தத் தாக்குதலுக்கான பின்னணிக் காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. “இளைஞர் நல மையக் கட்டிடம் ஒன்றில் பலரைக் குறிவைத்து இந்தக்கொலைச் சம்பவம் நடந்துள்ளது. இதில் […]