ஜப்பானில் முதல் முறையாக கடமையில் இணைக்கப்பட்டுள்ள AI காவல்துறை அதிகாரி
மோசடி குற்றங்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுதும் நோக்கில் ஜப்பானிய அரசாங்கம் செயற்கை நுண்ணறிவு காவல்துறைத் தலைவரை நியமித்துள்ளது.
AIko என்று அழைக்கப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோ, ஒசாகா மாகாண காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பமானது நூதனமான முறையில் மோசடியில் ஈடுபடுவர்களை குறிவைக்கிறது.
AIko, ஒரு இளம் பெண்ணின் முகம் மற்றும் குரலுடன் யூடியூபில் தோன்றி, காணொளி அழைப்பில் தன்னை ஒரு அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு மோசடி குறித்த எச்சரிக்கை செய்திகளை வழங்குகிறது.
முதலீட்டு மோசடிகள், காதல் மோசடிகள், மற்றும் காவல்துறை அதிகாரிகள், பிரபலங்கள் மற்றும் பிற நம்பகமான நபர்களைப் போல் ஆள்மாறாட்டம் செய்யும் குற்றவாளிகளால் சுமார் 02 பில்லியன் நிதியிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக ஜப்பானிய காவல்துறை தெரிவித்துள்ளது.




