ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு : நீண்ட வரிசையில் மக்கள்
உக்ரைனில் நடக்கும் போர் நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பைத் தொடர்ந்து சீர்குலைத்து வருவதால், ரஷ்யா ஒரு வளர்ந்து வரும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலைமையை கையாள்வது தொடர்பில் இன்றைய தினம் புட்டின் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது எரிபொருள் பற்றாக்குறையை ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டதோடு, உள்நாட்டு விநியோகத்தை நிலைப்படுத்த டீசல் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் முழுத் திறனில் இயங்கினாலும், எரிபொருள் பற்றாக்குறை வாகன ஓட்டிகள், வணிகங்கள் மற்றும் விவசாயத் துறையைத் தொடர்ந்து பாதித்து வருவதாகக் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் நிலையங்கள் மீது உக்ரைன் நடத்திய தொடர்ச்சியான ஆளில்லா விமானத் தாக்குதல்களே எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகத்தை சீர்குலைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் சேதங்களைத் தடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
எரிபொருள் விநியோகம் மற்றும் வழங்கலுக்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் உரையாற்றிய புடின், ரஷ்யாவின் சில பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளதாகவும், சில வகை எரிபொருள்கள் இன்னும் கிடைக்காமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




