ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஐவர் சுட்டுக்கொலை: வடக்கு ஜெர்மனியில் பயங்கரம்

ஹம்பர்க் (Hamburg) நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஸ்டேட் (Stade) நகரம், சுமார் 50,000 மக்கள் தொகையைக் கொண்ட ஒரு பகுதியாகும்.

வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் (Stade) நகரில் உள்ள இளைஞர் நல மையத்தில் நடந்த
துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தையடுத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவராக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனினும், இந்தத் தாக்குதலுக்கான பின்னணிக் காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

“இளைஞர் நல மையக் கட்டிடம் ஒன்றில் பலரைக் குறிவைத்து இந்தக்கொலைச் சம்பவம் நடந்துள்ளது.

இதில் ஐந்து பேர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர், மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்டேட் நகர மையத்திற்குத் தெற்கே உள்ள டான்கர்ஸ்ஸ்ட்ராஸ் (Dankersstrasse) வீதியில் பாரிய அளவிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுமக்கள் அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், அவசரக்கால மீட்புப் படையினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஹம்பர்க் (Hamburg) நகரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் (25 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஸ்டேட் (Stade) நகரம், சுமார் 50,000 மக்கள் தொகையைக் கொண்ட ஒரு பகுதியாகும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி