இந்தோனேசியாவில் அரசின் இலவச உணவு திட்டத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு!
இந்தோனேசியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட அரசாங்கத்தினால் இலவச உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டமே உணவு விஷமானதற்கு பிரதான காரணம் என சட்டமன்ற உறுப்பினர்களிடம் அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க வேண்டும் என விமர்சகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தத் திட்டத்தை மேற்பார்வையிடும் தேசிய BGN நிறுவனத்தின் தலைவரான தாதன் ஹிந்தயானா (Dadan Hindayana) இந்தோனேசியா […]













