அரசியல் இலங்கை

இராணுவம் போதைப்பொருள் கடத்தல்: ஆதாரம் கோருகிறது பாதுகாப்பு அமைச்சு! 

வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்துடன் பாதுகாப்பு தரப்பினருக்கு தொடர்புள்ளது என தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்டத்தின் 2ஆவது வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றும்போதே பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர மேற்படி குற்றச்சாட்டை நிராகரித்தார்.

“ இராணுவம் மற்றும் பொலிஸார் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என கேஜந்திரகுமார் பொம்மன்பலம் எம்.பி. குறிப்பிட்டார்.

இவ்வாறு நடக்கின்றதெனில் இடங்களின் பெயர், எந்த பொலிஸ் நிலையம் மற்றும் எந்த படைப்பிரிவு போன்ற தகவல்களை முன்வைக்க வேண்டும். அப்போது அது பற்றி தேடி பார்க்கலாம்.

அவ்வாறு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்பு கிடையாது.” எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Saranya

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்