இந்தியா

ஆபத்தான நிலையில் காற்றின் தரம் – மருத்துவமனையில் குவியும் நோயாளர்கள்!

  • November 24, 2025
  • 0 Comments

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காற்றின் தரம் இன்று அபாயகரமான நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றுப்படி, பல பகுதிகளில், காற்று தரக் குறியீடு (AQI) சுமார் 450 ஆக பதிவாகியுள்ளது.  இது காற்று மாசுபாட்டின் தரத்தின் அடிப்படையில் “கடுமையானது” என்று கருதப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக, டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மோசமாகவே உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் சுவாச பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். சுவாசக் […]

உலகம்

ஜப்பானில் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய கார் – இருவர் கைது!

  • November 24, 2025
  • 0 Comments

ஜப்பானில் கார் ஒன்று பொதுமக்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இதில் 10 பேர் காயமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஓட்டுனர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.    

இலங்கை

சீரற்ற வானிலை – 10 பேர் உயிரிழப்பு, 504 குடும்பங்கள் பாதிப்பு!

  • November 24, 2025
  • 0 Comments

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 504 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும்   பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக இரண்டு வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும், 193 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் DMC வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏதேனும் பேரிடர் அல்லது வானிலை தொடர்பான அவசரநிலை ஏற்பட்டால் 117 அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், நாடு முழுவதும் நிலவும் […]

அரசியல் இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

ட்ரம்பின் அமைதி திட்டம்: ஆஸ்திரேலியா கூறுவது என்ன? 

  • November 24, 2025
  • 0 Comments

உக்ரைனுக்கான எந்தவொரு அமைதித் திட்டமும் புதிய பகுதியை ரஷ்யாவிடம் ஒப்படைப்பதாக அமையக்கூடாது என்று ஆஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. உக்ரைன், ரயா போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள அமைதித் திட்டத்துக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையிலேயே ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான டிரம்பின் முன்மொழிவு குறித்து விவாதிக்க அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் உக்ரைன் உயர் அதிகாரிகள் ஜெனீவாவில் கூடியுள்ளனர். இதன்போது […]

அரசியல் இலங்கை

நுகேகொடை கூட்டம் வெத்து வேட்டு!

  • November 24, 2025
  • 0 Comments

நுகேகொடை கூட்டமானது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையவில்லை என்று பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். நுகேகொடையில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தால் அரசாங்கம் கதிகலங்கி நிற்கின்றது என கூட்டு எதிரணியினர் எனக் கூறிக்கொள்ளும் தரப்பு கூறிவரும் நிலையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார். “ நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இதற்கு அஞ்சியே தமது சில சகாக்களை அழைத்துக்கொண்டு அவர்கள் கொழும்பு வந்துள்ளனர். இந்த கூட்டம் […]

பொழுதுபோக்கு

பாலிவூட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா திடீர் மரணம்

  • November 24, 2025
  • 0 Comments

பாலிவூட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். கடந்த மாதம் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தர்மேந்திராவின் இறுதிச் சடங்கு வில்லே பார்லேயில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. தர்மேந்திராவின் மூத்த மகன் சன்னி தியோல் அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். தர்மேந்திராவுக்கு பாலிவூட் நட்சத்திரங்கள் பலரும் சேரில் சென்று இரங்கல் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் சட்டம் – ஸ்லோவாக்கியாவில் (Slovakia) வாக்கெடுப்பு!

  • November 24, 2025
  • 0 Comments

கடுமையான நோய் தாக்கங்களை எதிர்கொண்டு போராடும் நோயாளிகள் தங்கள் வாழ்க்கையை முடித்துகொள்ள அனுமதிக்கும் சட்டமூலம் குறித்து ஸ்லோவாக்கியாவில் (Slovakia) வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. குறித்த வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் தொடர்புடைய சட்டமூலம்  அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் எதிர்பாளர்கள்  40,000 கையொப்பங்களை சேகரித்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கில் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கருத்துக்களை கோரும் வகையில் மற்றொரு வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்புகளின்படி பெரும்பாலான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

இலங்கை செய்தி

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை வாகனங்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை!

  • November 24, 2025
  • 0 Comments

அடுத்த ஆண்டு முதல் பாடசாலை வாகனங்களில் பாதுகாப்பு கெமராக்களை பொருத்தும் நடவடிக்கை கட்டாயமாக்கப்படும் என  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பொது போக்குவரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான துன்புறுத்தல் அதிகரித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைக் குறைக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும்  உறுதியளித்தார். […]

உலகம் செய்தி

வெனிசுலா ஊடாக பறப்பதில் ஆபத்து – சேவைகளை இரத்து செய்த விமான நிறுவனங்கள்!

  • November 24, 2025
  • 0 Comments

வெனிசுலாவில் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக உலகின் பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்நாட்டிற்கான விமான சேவைகளை நேற்று முதல் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெனிசுலாவில் உள்ள விமான நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் மரிசெலா டி லோயிசா (Marisela de Loaiza) அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். TAP, LATAM, அவியான்கா (Avianca), ஐபீரியா (Iberia), கோல் (Gol) மற்றும் கரீபியன் (Caribbean) உள்ளிட்ட 06 விமான நிறுவனங்கள் சேவைகளை காலவரையறையின்றி  நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் துணை இராணுவப் படை தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல்!

  • November 24, 2025
  • 0 Comments

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் (Peshawar) உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை குறிவைத்து இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு தற்கொலைக்குண்டுதாரிகள் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். முதல் நபர்  பிரதான நுழைவாயிலில் தாக்குதலை நடத்தியதாகவும் மற்றவர் வளாகத்திற்குள் நுழைந்ததாகவும்  தெரிவிக்கப்படுகிறது. இதில் மூன்றுபேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதுடன், காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. காவல்நிலையத்திற்குள் தாக்குதல்தாரிகள் இருக்கலாம் என நம்பப்படுகின்ற நிலையில், அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் குறித்த பகுதியூடான சாலை […]