உலகம் செய்தி

பாகிஸ்தானில் துணை இராணுவப் படை தலைமையகத்தை குறிவைத்து தாக்குதல்!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் (Peshawar) உள்ள துணை ராணுவப் படை தலைமையகத்தை குறிவைத்து இன்று தாக்குதல் நடத்தப்பட்டதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு தற்கொலைக்குண்டுதாரிகள் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளனர். முதல் நபர்  பிரதான நுழைவாயிலில் தாக்குதலை நடத்தியதாகவும் மற்றவர் வளாகத்திற்குள் நுழைந்ததாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இதில் மூன்றுபேர் கொல்லப்பட்டதாக கூறப்படுவதுடன், காயமடைந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

காவல்நிலையத்திற்குள் தாக்குதல்தாரிகள் இருக்கலாம் என நம்பப்படுகின்ற நிலையில், அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியூடான சாலை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி