அரசியல் இலங்கை

என்.பி.பி. அரசுக்கு எதிராக இரு முனை தாக்குதல்: எதிரணி வியூகம்!

  • November 24, 2025
  • 0 Comments

நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காத நிலையில், அக்கூட்டத்தை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பாராட்டியுள்ளார். நுகேகொடை கூட்டம் வெற்றிகரமானது எனவும், இதுபோன்ற நடவடிக்கையை தமது கட்சியும் ஆரம்பிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ் நெல்சன் தெரிவித்தார். “ நுகேகொடை கூட்டத்துக்கு எவரையும் வலுக்கட்டாயமாக அழைத்துவரவில்லை. அவ்வாறு அழைத்து வந்திருந்தால் கொட்டும் மழைக்கு மத்தியில் மக்கள் நின்றிருக்கமாட்டார்கள். கூட்டம் மூலம் வழங்கப்பட்ட செய்தியை அரசாங்கம் உணர […]

அரசியல் இலங்கை

ரணில், சஜித் அணிகள் இணைவு: காட்டப்பட்டது பச்சைக்கொடி !! 

  • November 24, 2025
  • 0 Comments

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதக ழ்நிலை உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. இதன்போதே ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவது தொடர்பான பொறுப்பை ஏற்பதற்கு தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டார் என்று அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இதற்கமைய இரு தரப்பு இணைவு விரைவில் சாத்தியமாகும் என்று ஐக்கிய […]

ஐரோப்பா

லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிராக வெடித்த போராட்டம்!

  • November 24, 2025
  • 0 Comments

லண்டனில் தமிழீழ தேசிய கொடிநாள் வாரத்தை முன்னிட்டு, நாடு கடந்த தமிழர் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் பிரித்தானியாவின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் நினைவு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இன்றையதினம் கொடிநாள் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது லண்டன் டிராபிளாகர் சதுக்கத்தில் (Trafalgar Square) தமிழர்கள் பெருந்திரளாகக் கூடி கொடிநாள் அனுஷ்டிப்பை கௌரவத்துடன் கொண்டாடினர். புலிக்கொடியை ஏந்தியவாறு மக்கள் பேரணியாக நகர்ந்ததுடன், சதுக்கத்தை நோக்கி அணிவகுத்து சென்றனர். பின்னர் தமிழீழ தேசியக் கொடி உயர்த்தப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து வயதினரும் […]

உலகம்

ஆஸ்திரேலியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய செனட்டர் – அவை நடவடிக்கை இடைநிறுத்தம்!

  • November 24, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் செனட் சபை இன்று ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தீவிர வலதுசாரி செனட்டர் பவுலின் ஹான்சன் (Pauline Hanson) பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்ததால், அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் சபைக்குள் முக மறைப்பை அகற்ற மறுத்துவிட்டமையால் இந்நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்றைய அமர்வில் இருந்து அவர் நாள் முழுவதும் விலக்கிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது செயல்களை அனைத்து கட்சிகளின் செனட்டர்களும் பரவலாகக் கண்டித்துள்ளனர். செனட்டர் பவுலின் ஹான்சனின் (Pauline Hanson) […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பிரதான சாலையில் போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!

  • November 24, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு லிங்கன்ஷையரில் (North Lincolnshire)  உள்ள A160 உட்பட முக்கிய பாதைகளில் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில், நீதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) ‘குடும்ப பண்ணை வரி (‘family farm tax’) விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வரியின் கீழ்,  விவசாய நிலங்கள் மற்றும் £1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வணிகங்களுக்கு 20 சதவீதம் வரி […]

இலங்கை

கொலைக் குற்றச்சாட்டு – 10 பேருக்கு மரண தண்டனை!

  • November 24, 2025
  • 0 Comments

கடந்த 2011 ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய, முல்லையா பகுதியில் நபர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய வழக்கு இன்று எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில்,   மூன்று பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி, தனிப்பட்ட தகராறில் 30 வயதுடைய ஒருவர் கூர்மையான ஆயுதங்கள் மற்றும் […]

பொழுதுபோக்கு

இந்த வாரம் மக்கள் காப்பாற்றப்போவது யாரை?

  • November 24, 2025
  • 0 Comments

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டு இருக்கின்றது. இறுதியாக கெமி வீட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் அடுத்த நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம் போட்டியில் நீடிக்கத் தகுதியற்ற போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 11 பேர் இடம்பெற்றுள்ளனர். அந்த வகையில் சான்ட்ரா, ப்ரஜின், திவ்யா கணேசன், கமருதீன், கனி திரு, எஃப்.ஜே., விக்ரம், அமித் பார்கவ், அரோரா, விஜே […]

ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் அதிகரிக்கும் பதற்றம் – லேசர்களை காட்டி அச்சுறுத்தும் ரஷ்யா!

  • November 24, 2025
  • 0 Comments

டோவர் ஜலசந்தி ( Dover Strait) மற்றும் ஆங்கிலக் கால்வாயில், ரஷ்ய போர் கப்பலின் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ரஷ்ய கப்பல்களின் அச்சுறுத்தல் 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி (John Healey) சமீபத்தில், ரஷ்ய உளவுக் கப்பலான யந்தர் (Yantar) இங்கிலாந்து கடல் எல்லைக்கு அருகே விமானிகளை நோக்கி லேசர்களைக் காட்டி அச்சுறுத்தியதாக தெரிவித்துள்ளார். நாங்கள் உங்களைப் பார்க்கிறோம். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது எங்களுக்குத் […]

உலகம்

குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் மலேசியா!

  • November 24, 2025
  • 0 Comments

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்யவுள்ளதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இம்முறை அடுத்த ஆண்டு (2026) முதல் நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் (Fahmi Fadzil),  நிதி மோசடிகள் மற்றும்  பாலியல் துஷ்பிரயோகம் போன்ற ஆன்லைன் பாதிப்புகளிலிருந்து இளைஞர்களைப் பாதுகாப்பதே இந்த தடையின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் இந்த […]

பொழுதுபோக்கு

23 ஆண்டுகளுக்கு முன் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகையின் வழக்கு

  • November 24, 2025
  • 0 Comments

உயிரிழந்த பிரபல நடிகை பிரதியுஷா வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த தெலுங்கு நடிகை பிரதியுஷா தனது காதலருடன் இணைந்து கடந்த 2002ஆம் ஆண்டு பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் காதலரான சித்தார்த் உயிர் தப்பிய நிலையில், பிரதியுஷா உயிரிழந்தார். இதனையடுத்து சித்தார்த்திற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் 2 ஆண்டுகளாக நீதிமன்றம் குறைத்தது. இதனால் அதிருப்தி அடைந்த பிரதியுஷாவின் தாயார், கடந்த 2012 ஆம் ஆண்டு உச்ச […]