ஆப்கானிஸ்தானில் குடியிருப்பாளரின் வீட்டை தாக்கிய பாகிஸ்தான் – 09 குழந்தைகள் பலி!
ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் குடியிருப்பாளர் ஒருவரின் வீட்டில் பாகிஸ்தான் படைகள் குண்டு வீசி நேற்று தாக்குதல் நடத்தியதியுள்ளனர். இதில் ஒன்பது குழந்தைகளும் ஒரு பெண்ணும் கொல்லப்பட்டதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் (Zabihullah Mujahid) தெரிவித்தார். குனார் (Kunar) மற்றும் பாக்டிகா (Paktika) மாகாணங்களிலும் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பெஷாவரில் (Peshawar) இரட்டை தற்கொலை குண்டுவெடிப்பில் மூன்று துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட ஒரு […]













