இலங்கை

பேரிடர் சூழல் – துக்க நாளை அறிவிக்குமாறு கோரிக்கை!

  • December 3, 2025
  • 0 Comments

பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துக்க நாளை அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  அரசாங்கத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கோரியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், சமீபத்திய பேரிடரில் இறந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் துக்க நாளை அறிவிக்கவும். “பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வது தெய்வீகக் கடமையாகும்” எனக் கூறியுள்ளார். மேலும் இலங்கையின் இருண்ட காலங்களில் உதவிய அனைத்து நாடுகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

இலங்கை

பேரழிவுக்குப்பின் இலங்கைக்கு படையெடுத்த 2,300 சர்வதேச பயணிகள்

  • December 3, 2025
  • 0 Comments

2,300 சர்வதேச பயணிகளுடன் இன்று (03)மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பல் நாட்டை வந்தடைந்தது. “மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்” என வர்ணித்து, இலங்கை சுற்றுலா அதிகாரசபை இந்த கப்பலை வரவேற்றது. கடந்த வாரம் இடம்பெற்ற இயற்கை பேரழிவிற்குப் பின்னர் முதல் முறையாக பெரிய சொகுசு சுற்றுலா கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த சொகுசு கப்பலில் இருந்த 2,300 பயணிகளில் 1,600 க்கும் மேற்பட்ட ஜேர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் […]

இலங்கை

விமல் வீரவன்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

  • December 3, 2025
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்ய நீதிமன்றம் இன்று  பிடியாணை பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசு வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதாக  விமல் வீரவன்ச மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் விளைவாக அரசாங்கத்திற்கு   9 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடுகளுடன் போருக்கு தயாராகும் புட்டின்!

  • December 3, 2025
  • 0 Comments

தேவைப்பட்டால் ஐரோப்பாவுடன் போருக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகள் “போரின் பக்கம்” இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். போர் நிறுத்தம் குறித்து ஐரோப்பிய நாடுகள் முன்வைக்கும் அமைதி கோரிக்கைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும்  அவை ட்ரம்பின் அமைதி முயற்சிகளைத் தடுக்கின்றன என்றும் அவர் விமர்சித்துள்ளார். ட்ரம்ப் முன்வைத்துள்ள 20 அம்ச கோரிக்கைகள் ரஷ்யாவிற்கு சார்பாக இருப்பதாக  ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை

இலங்கையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபாய்

  • December 3, 2025
  • 0 Comments

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அந்தந்த மாகாண மட்டத்தில் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]

உலகம்

வெனிசுலா விவகாரம் : போர் குற்ற விசாரணையை எதிர்கொள்ளும் பென்டகன்!

  • December 3, 2025
  • 0 Comments

வெனிசுலாவில் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான  அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்தகைய தாக்குதல்கள் முன்னெப்போதையும் விட இலகுவானதாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. தற்போது சாத்தியமான போர் குற்றங்கள் தொடர்பான விசாரணையை  பென்டகன் எதிர்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்திற்கு பிறகு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் போர் குற்றங்கள் குறித்த சாத்தியமான […]

இலங்கை

இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்தது

  • December 3, 2025
  • 0 Comments

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (03) காலை 10.00 மணிக்கு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் புள்ளிவிபரங்களின்படி, 356 பேர் காணாமல் போயுள்ளனர். இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, 25 மாவட்டங்களிலும் 448,817 குடும்பங்களைச் சேர்ந்த 1,586,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்காக நாடளாவிய ரீதியில் 1,385 பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்முகாம்களில் 53,758 குடும்பங்களைச் […]

இலங்கை

பொதுமக்களிடம் அவசரக் கோரிக்கை!

  • December 3, 2025
  • 0 Comments

ஹெலிகாப்டர் செயல்பாடுகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன்களை இயக்குவதை தவக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார். சமீபத்திய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து தேடுதல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய அவசரகால முயற்சிகளை ஆதரிப்பதற்கும் நாட்டின் வான்வெளியின் பாதுகாப்பைப் பராமரிப்பதற்கும் இந்த நேரத்தில் அனைத்து ட்ரோன் இயக்குபவர்களின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு வட்டி விதிக்க முன்மொழிவு!

  • December 3, 2025
  • 0 Comments

துறைமுகத்தில் சிக்கித் தவிக்கும் சுமார் 900 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது நிதிக் குழுவின் (COPF) தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை   விடுத்துள்ளார். குறித்த வாகனங்களின் விலைப்பட்டியல் மதிப்பில் வட்டி விதிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.

இலங்கை

அமைச்சரவை கூட்டத்தை அவசரமாகக் கூட்டிய ஜனாதிபதி!

  • December 3, 2025
  • 0 Comments

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் தற்போதைய பேரிடர் சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.