இலங்கை

இலங்கையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் 25,000 ரூபாய்

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனர்த்தத்தினால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளை அந்தந்த மாகாண மட்டத்தில் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடும் மழை காரணமாக மாத்தளை  மாவட்டம் ரத்தோட்டை, கம்மடுவ பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்று முற்றாக அழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்