இலங்கையில் 30 இலட்சம் கோழிகள் பலி: முட்டைப் பற்றாக்குறை!
சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கால் சுமார் 30 இலட்சம் (3 மில்லியன்) முட்டையிடும் கோழிகள் பலியாகியுள்ளன. இதனால், நாடு முழுவதும் முட்டைப் பற்றாக்குறை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சீதுவை, ரட்டோலுகமவில் அமைந்துள்ள சங்கத்தின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜயவர்தன(Jayawardena) அவர்கள், நிலவும் சூழல் குறித்த முக்கிய கருத்துக்களை வெளியிட்டார். ஏற்கெனவே சந்தையில் முட்டையின் விலை உயரத் தொடங்கியுள்ளதாகவும், நிலைமையைச் சமாளிக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் […]













