தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைய விரும்பும் ஹாரி
மன்னர் சார்லஸ் மற்றும் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணக்கமாகச் செயல்பட விரும்புவதாக இளவரசர் ஹாரி தெரிவித்துள்ளார்.
மன்னரின் இளைய மகனான 42 வயதான ஹாரி, தனது மனைவி மேகனுடன் இணைந்து அரச குடும்பக் கடமைகளிலிருந்து விலகி, 2020-ல் கலிபோர்னியாவிற்குச் சென்றார்.
இது பிரித்தானிய அரச குடும்பத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தியது. அங்கிருந்து அவர்கள் அரச குடும்ப அமைப்பைக் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளனர்.
அவரிடம் ‘GQ’ இதழ் பேட்டிக் கண்டுள்ளது. அதில் கருத்து வெளியிட்ட ஹாரி, குடும்ப உறவுகளைச் சரிசெய்ய விரும்புவதாகக் கூறியுள்ளார்.
“உலகில் நடக்கும் பிற விஷயங்களை விட, மீண்டும் இணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதே மிக முக்கியமான விஷயமாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது குடும்பச் சூழலைப் பற்றி மக்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைத் தம்மால் புரிந்துகொள்ள முடிகிறது என்றும், ஏனெனில் மக்கள் இத்தகைய சூழல்களைத் தங்கள் சொந்த வாழ்க்கையோடும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
“சகோதரர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்; பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவுகள் முறிந்திருக்கலாம்; அல்லது பிள்ளைகளுக்கும் ஒரு பெற்றோருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.




