உலகம் செய்தி

துருக்கியுடன் கடல்சார் ஒப்பந்தம்: லிபியாவின் கிழக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

பல ஆண்டுகளாக நீடித்த முரண்பாடுகளுக்கு பின்னர், துருக்கியுடன் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஒப்பந்தத்துக்கு லிபியாவின் கிழக்குப் பகுதியைத் தளமாகக் கொண்ட நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பல ஆண்டுகளாக நீடித்த முரண்பாடுகளுக்கு பின்னர், துருக்கியுடன் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் ஒப்பந்தத்துக்கு லிபியாவின் கிழக்குப் பகுதியைத் தளமாகக் கொண்ட நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

துருக்கி ஆதரவு இராணுவத் தளபதி கலீபா ஹப்தாரின் ஆதரவுடன் இயங்கும் இந்த நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட திரிபோலியைத் தளமாகக் கொண்ட அரசியல் நிர்வாகத்துக்கு மாற்றாக செயல்பட்டு வருகிறது.

துருக்கியுக்கும் லிபியாவுக்கும் இடையில் மத்தியதரைக் கடலில் கடல்சார் எல்லைகளை வரையறுப்பது தொடர்பாக, 2019ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஹப்தாரின் ஆதரவிலான பிரதிநிதிகள் சபை ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளதாக, பெங்காசியைத் தளமாகக் கொண்ட நிர்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின் விதிகள் குறித்து விசேட குழுக்கள் முழுமையான விளக்கத்தை முன்வைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆயிஷா அல்-தபல்கி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

குறித்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதற்கு 2020ஆம் ஆண்டு இதே நாடாளுமன்றம் ஏகமனதாக எதிர்ப்புத் தெரிவித்ததுடன், துருக்கியுடனான அரசியல் உறவுகளையும் துண்டித்திருந்தது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம், அந்த நடவடிக்கைகளைத் திரும்பப் பெறுவதைக் குறிக்கிறது. கடந்த ஆண்டு முதல் உருவாகிவரும் துருக்கியின் மூலோபாய அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையும் இது உறுதிப்படுத்துகிறது.

ஹப்தாரின் லிபிய தேசிய இராணுவத்துடன் (LNA) துருக்கி இராணுவ ரீதியான தொடர்புகளை அதிகரித்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, இராணுவ வசதிகள் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்குவது தொடர்பான ஒப்பந்தமொன்றும் கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டது.

திரிபோலியைத் தளமாகக் கொண்ட அரசாங்கத்துக்கு விசுவாசமான படைகளுக்கும் லிபிய தேசிய இராணுவத்துக்கும் இடையில் மோதல்கள் நீடித்து வருகின்றன. லிபிய தேசிய இராணுவத்துக்கு எகிப்து உள்ளிட்ட பிராந்திய நாடுகள் ஆதரவளித்து வந்ததாக நீண்டகாலமாகக் கருதப்படுகிறது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி