சகோதரருடனான உறவைச் சரிசெய்ய விரும் ஹாரி – விடாப்பிடியாய் நிற்கும் வில்லியம்
இளவரசர் ஹாரி தனது சகோதரர் இளவரசர் வில்லியமுடனான உறவைச் சரிசெய்ய விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், வில்லியம் அவருடன் சமரசம் செய்துகொள்ளும் எண்ணத்தில் இல்லை என்று கூறப்படுகிறது. ‘GQ’ இதழுக்கு ஹாரி அளித்த பேட்டியில், தான் மீண்டும் பிரித்தானியா திரும்பியதற்கு, தனது குடும்பத்தினருக்கு அருகில் இருக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கிடையேயான நீண்டகாலப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமே காரணம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பில் இளவரசர் வில்லியமுக்கு நெருக்கமான வட்டாரங்கள், ஹாரி தம்மையும் அரச குடும்பத்தின் […]



