உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஜெர்மனி மற்றும் போர்த்துகல்
ஜெர்மன் மற்றும் போர்த்துகல் ஆகிய நாடுகள் உக்ரைனுக்கான தங்களது ஆதரவை இன்று மீண்டும் உறுதிப்படுத்தின.
ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் காட்டவில்லை என்றும் அந்நாடுகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போர்த்துகல் அமைச்சர், இந்தக் கடினமான புவிசார் அரசியல் சூழ்நிலையில், நாங்கள் ஒரு பொதுவான பார்வையைப் பகிர்ந்து கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை “தற்போதைய சூழ்நிலையில் ஆக்கிரமிப்பாளரான புதினுக்கு இடமளிப்பது முற்றிலும் தவறான சமிக்ஞையாக இருக்கும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்,” என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடேஃபுல் Johann Wadephul தெரிவித்துள்ளார்.




