உக்ரைனில் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கிய ரஷ்யா – புட்டின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
உக்ரைனுடனான எல்லையை ஒட்டிய உக்ரைன் பகுதியில் ரஷ்யா ஒரு “பாதுகாப்பு மண்டலத்தை” உருவாக்கி வருகிறது என்றும், எதிர்காலத்தில் உக்ரைனுடன் நடைபெறக்கூடிய எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் இது குறித்து விவாதிக்கப்பட மாட்டாது என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
க்ரைன் 2024-25 காலகட்டத்தில் ரஷ்யாவின் மேற்குப் பகுதியான குர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊடுருவியதற்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொலைகாட்சியில் அவர் ஆற்றிய உரையில், “எதிரிகளை நமது நிலத்திலிருந்து வெளியேற்றுவது மட்டுமல்லாமல், எல்லையை ஒட்டிய பகுதியில் ஒரு பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்குவதும் ரஷ்ய ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்ட பணியாகும். இந்தப் பணி வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியங்களின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதே எங்கள் இலக்கு.
உக்ரைனுடன் நடைபெறக்கூடிய அமைதிப் பேச்சுவார்த்தைகளில், இந்த விவகாரத்தை ஒரு பொருளாக மாற்ற நாங்கள் திட்டமிடவில்லை.” என்றார்.
கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், இந்தத் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு மண்டலம் 660 கி.மீ (410 மைல்) நீளத்தைக் கொண்டிருப்பதாகவும், இதில் 70 சதவீதப் பகுதி தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார்.




