நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் – மரணங்களின் எண்ணிக்கை உயர்வு
நேபாளத்தின் ரசுவா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
அதேநேரம் 291 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 400 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதற்கிடையே நேபாளத்தில் சுமார் 85 முதல் 100 இலங்கையர்கள் வாழ்கின்ற நிலையில் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.




