நேபாளம் விரையும் இந்திய போர் விமானங்கள்
திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் உருக்குலைந்துள்ள நேபாளத்திற்கு உதவ இந்திய போர் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
நேபாளத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். 105க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர்.
நேபாள பிரதமர் உடன் பேசிய ந பிரதமர் மோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளதுடன் தேவையான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், நேபாளத்திற்கு மீட்புப் பணிகளில் உதவி செய்யும் வகையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சி -17, சி-130 ஜே மற்றும் சி-295 விமானங்களை விமானப்படை தயார் நிலையில் வைத்து உள்ளது. வைக்கப்பட்டுள்ளன. இன்னும் சற்று நேரத்தில் நேபாளம் நோக்கி புறப்படவுள்ளன.




