இலங்கை செய்தி

கிளிநொச்சியில் 17 வயது யுவதியை பலியெடுத்த ‘யாழ்.தேவி’- இருவர் படுகாயம்

கிளிநொச்சியில் இன்று காலை ரயிலும் காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியில் இன்று காலை ரயிலும் காரும் மோதி ஏற்பட்ட விபத்தில் காரில் பயணித்த இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த யாழ். தேவி விரைவு ரயில், யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக வீதியில் அமைந்துள்ள ரயில் கடவையில் காருடன் மோதியே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் கிளிநொச்சி, செல்வாநகரைச் சேர்ந்த தினேஷ்குமார் அக்யசா (வயது 17) என்ற சிறுமியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காரில் பயணித்த மற்றைய இருவர் படுகாயமடைந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை