இலங்கை

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை – 500000 இலட்சம் அபராதம் விதிப்பு

  • July 31, 2026
  • 0 Comments

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு செல்லும்  ரயில் ஒன்றில் நடமாடும் சிற்றுண்டிச்சாலையை இயக்கி வந்த நிறுவனம் ஒன்று தண்ணீர் போத்தல் ஒன்றின் விலையை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளது. 120 மதிப்புள்ள 1,000 மி.லி குடிநீர் போத்தலின் விலையை 150 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகாரிகள் குறித்த நிறுவனத்தை சோதனை செய்து கையும் களவுமாக இந்த முறைக்கேட்டை கண்டுப்பிடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அனுராதபுர நீதவான் […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் குடிநீர் விநியோகத்தில் சிக்கல் – 7000 வீடுகள் பாதிப்பு

  • July 19, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக சுமார் 7,000 வீடுகளில் குறைந்த அழுத்த நீர், விட்டுவிட்டு வரும் நீர் விநியோகம் அல்லது தண்ணீர் இல்லாமை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உள்ளூர் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட கருவி கோளாறு காரணமாக இந்நிலை ஏற்பட்டதாக  சவுத் ஈஸ்ட் வாட்டர் (SEW) நிறுவனம் கூறியதுடன், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளது. எவ்வாறாயினும் இன்று மாலைக்குள் நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

இலங்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்

  • July 13, 2026
  • 0 Comments

எல்நினோ தாக்கத்தின் காரணமாக கடும் வெப்பமான வானிலையால் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் எனவும், எனவே நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் துறையின் கீழ் நிர்வகிக்கப்படும் 80 நீர்த்தேக்கங்கள், 48 சதவீதம் நிரம்பியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போதைய நீர் இருப்பு அளவைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தவும், கையிருப்பைச் சேமிக்குமாறும், நீர்ப்பாசன இயக்குநர் (நீர் மேலாண்மை) பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத் தெரிவித்துள்ளார். இருப்பினும் குடிநீருக்காக நீர்த்தேக்கங்களைச் சார்ந்துள்ள சமூகங்களுக்கு  போதுமான நீர் விநியோகம் உள்ளதாகவும் அவர் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கடும் வெப்பம் : நீரை சேமித்து வைக்க அறிவுறுத்து

  • June 27, 2026
  • 0 Comments

மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய வெப்பநிலை தற்போது கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளால் ஜெர்மனியில் கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்றைய தினம் 40 டிகிரி செல்சியஸுக்கும் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் வாழும் மக்கள் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெப்பநிலை 36°C ஆக இருக்கும் என்றும், சில இடங்களில் அதிகபட்சமாக 42°C வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நீரேற்றத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனிதனால் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நீர் தேவையை பூர்த்தி செய்ய கடல் நீரை நாடும் மக்கள்!

  • May 5, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் கிழக்கு சசெக்ஸில் மக்கள் மூன்று நாட்களாக குடிநீர் இன்றி அவதிபட்டு வருகின்ற நிலையில், பிரபலமான ஹோட்டல்கள் கழிவறையை சுத்தம் செய்ய கடல் நீரைபயன்படுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் 32000 மக்கள் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். செயின்ட் லியோனார்ட்ஸ்-ஆன்-சீ, ஹேஸ்டிங்ஸ் மற்றும் வெஸ்ட்ஃபீல்டில் வசிப்பவர்கள் இன்னும் தண்ணீர் இன்றி தவிப்பதாக சதர்ன் வாட்டர் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 6000 வாடிக்கையாளர்களுக்கு தண்ணீரை விநியோகிப்பதற்காக 04 நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. செயின்ட் லியோனார்ட்ஸ்-ஆன்-சீயில் உள்ள அஸ்டா மற்றும் டெஸ்கோ, […]