எபோலா தொற்று – காங்கோவில் நபர் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் முதல் மருத்துவப் பரிசோதனை நேற்று முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,700-ஐக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,600ஐக் கடந்துள்ளது.
இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் உள்ள பல சவால்களில் ஒன்றாக, தற்போது பரவி வரும் ‘புண்டிபுக்யோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லாத நிலை உள்ளது.
இந்நிலையில் எபோலாவின் பொதுவான ‘சையர்’ (Zaire) வகை வைரஸுக்கு எதிராக ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட ‘எர்வெபோ’ (Ervebo) எனும் தடுப்பூசி, ‘புண்டிபுக்யோ’ வகை வைரஸுக்கு எதிராகவும் பாதுகாப்பை வழங்குகிறதா என்பதைக் கண்டறிய, காங்கோ ஜனநாயகக் குடியரசில் முழு அளவிலான மனித மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இத்துரி மாகாணத்தின் தலைநகரான புனியாவில், முதல் நபருக்கு ‘ இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




