உலகம்

காங்கோவில் மேலும் இரு மாகாணங்களிலும் பரவி வரும் எபோலா தொற்று

  • July 9, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600ஐ எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நோய் தொற்றானது விரிவடைந்து வருவதை உணர்த்தும் வகையில் புதிய மாகாணமொன்றில் நோய் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மே 15 அன்று அறிவிக்கப்பட்ட இந்த நோய்ப் பரவலானது, இடுரி, வடக்கு கிவு மற்றும் தெற்கு கிவு ஆகிய கிழக்கு மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  அங்கு 1,759 பேர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சோபோ (Tshopo) மாகாணத்தின் தலைநகரமும் […]

ஐரோப்பா

குறைந்த நிதி ஒதுக்கீடு!! கடந்தகால படிப்பினைகள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

  • May 31, 2026
  • 0 Comments

எபோலா தொற்றை கட்டுப்படுத்த கடந்தகாலத்தோடு ஒப்பிடுகையில் பிரித்தானியா இம்முறை குறைந்த அளவிலான நிதியை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-15-ல் £427 மில்லியன் வழங்கிய நிலையில், தற்போது வெறும் 21 மில்லியன் மட்டுமே வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும் பாதுகாப்பு செலவீனங்களை கருத்தில் கொண்டு குறைந்த அளவிலான நிதி ஒதுக்கப்பட்டதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், உலகளாவிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவருமான பெக்கி கூப்பர் (Beccy Cooper), 2014/15 […]

இந்தியா

இந்தியாவிலும் எபோலா தொற்று? – தனிமைப்படுத்தலில் பெண் பயணி!

  • May 27, 2026
  • 0 Comments

எபோலா தொற்று சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். தொடர்புடைய அறிவிப்பை சுகாதார அமைச்சகம் இன்று உறுதிப்படுத்தியது. 28 வயதான குறித்த பெண்ணிற்கு  லேசான உடல் வலி ஏற்பட்டுள்ளதாகவும்,   மற்றபடி அவர்  நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால்  2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் பதிவாகிய முதல் எபோலா தொற்றாக இது இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலையாக […]

உலகம்

எபோலா தொற்று பற்றிய போதிய தெளிவின்மை : கட்டுப்படுத்துவதில் சிரமம்!

  • May 26, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயகக் குடியரசின் மையப் பகுதியில் வாழும் மக்கள்  எபோலா வைரஸ் பற்றிய போதிய விளக்கத்தை கொண்டிராதமையால் நோயை கட்டுப்படுத்துவதில் பாரிய சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ActionAid DRC நடத்திய மதிப்பாய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அங்கு வசிப்பவர்களில் 64 சதவீதம் பேர் மட்டுமே எபோலா உண்மையானது என நம்புவதாக தெரியவந்துள்ளது. ஏனையோர் அதனை பொய்யாக கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே குறித்த வைரஸ் பரவல் காரணமாக இதுவரை 200இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல் […]