இலங்கை செய்தி

போதைப்பொருள் கடத்தல் சம்பவம் – 22 தேரர்களுக்கும் விளக்கமறியல்

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ வகை போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 தேரர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று (02.05) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து குறித்த 22 தேரர்களையும் வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போது, 112 கிலோகிராம் போதைப்பொருளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

‘அமிதானந்த’ எனும் தேரர் ஒருவரே இந்த கடத்தலை வழிநடத்தியிருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. களுத்துறை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்ட இவர், நாளை (03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

குறித்த தேரரின் வழிகாட்டலில் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் இவருக்கு உதவியாக இருந்த நபர் ஒருவர் அத்துருகிரிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகநபர்களை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னரே இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!