ஹோர்முஸ் ஜலசந்திக்கு நிகரான மாற்றுப் பாதை கண்டுப்பிடிப்பு!
ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக முக்கிய எல்லைப் பாதையை நேற்று திறந்துள்ளன.
இந்த பாதையானது வர்த்தகம் மற்றும் எண்ணெய் ஏற்றுமதிக்கான தரைவழி அணுகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் போரின் மையமாக இருக்கும், நெருக்கடிக்குள்ளான ஹோர்முஸ் ஜலசந்திக்கு மாற்றுப்பாதையாக இது இருக்கும் எனக் கருதப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஈராக்கின் நினேவா மாகாண சபையின் உறுப்பினர் நாடியா அல்-ஜுபூரி, இந்த பாதை வர்த்தகப் பரிமாற்றம் மற்றும் எண்ணெய் போக்குவரத்திற்கு” வழிவகுக்கும் என்று கூறினார்.
இருப்பினும் எண்ணெயை கொண்டு செல்வதில் கடல் வழிப் போக்குவரத்தோடு ஒப்பிடும்போது தரைவழிப் போக்குவரத்து கடினமாக அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.





