ஐரோப்பா

பிரித்தானிய பிரதமர் பதவி விலக வேண்டும் : வலுக்கும் கோரிக்கை!

வொஷிங்டனுக்கான தூதராக பீட்டர் மாண்டல்சனை நியமித்தது தவறு என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் ஒப்புக்கொண்டாலும், குற்றத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்டாமர், இந்த நியமனம் ஒரு தவறுதான் என்றாலும்,  மாண்டல்சனுக்கு அப்பதவியை வழங்க வேண்டாம் என்ற பாதுகாப்பு அதிகாரிகளின் பரிந்துரைகளை வெளியுறவு அலுவலகம் நிராகரித்தது தனக்குத் தெரிந்திருந்தால், அந்த முடிவைத் திரும்பப் பெற்றிருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தவறாக நடத்தப்பட்ட தகுதி சரிபார்ப்பு செயல்முறை தொடர்பாக தனது பதவி விலகலுக்கான கோரிக்கைகளை அவர் நிராகரித்துள்ளார்.

இந்த விவகாரம் ஒரு பெரிய ஊழலாக உருவெடுத்துள்ளதால், அத்தகைய கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதை மறுத்த பிரதமர், வெளியுறவு அலுவலகத்தின் மீது முழுப் பழியையும் சுமத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த தோல்வியானது பிரதமரின் முடிவெடுக்கும் திறன் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!