இந்தியா செய்தி தமிழ்நாடு

இன்ஸ்ட்ராவால் குடும்பத்துக்குள் குழப்பம்: இளம் பெண்மீது சாணி ஊற்றி தாக்குதல்

தமிழ்நாடு மாநிலம், காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குடும்பப் பிரச்சினை, இளம்பெண் ஒருவர் மீது சாணி ஊற்றி, துடைப்பத்தால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.

தமிழ்நாடு மாநிலம், காரைக்குடியில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்டதாகக் கூறப்படும் குடும்பப் பிரச்சினை, இளம்பெண் ஒருவர் மீது சாணி ஊற்றி, துடைப்பத்தால் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் முடிவடைந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்குடி திலகர் நகரைச் சேர்ந்த ஜெயஸ்ரீ (20) என்பவர், கணேசபுரத்தைச் சேர்ந்த அபிநயா (23) என்பவரின் கணவர் கவியரசனுடன் இன்ஸ்டாகிராம் வழியாக அடிக்கடி உரையாடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுடன், கவியரசன் தனது மனைவி அபிநயாவுடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜெயஸ்ரீ தனது தோழியுடன் காரைக்குடி 100 அடி சாலையில், சூடாமணிபுரம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அபிநயா, அவரது சகோதரி அருணாதேவி (27) மற்றும் தோழி பிரியா (30) ஆகியோர் இருவரையும் வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஜெயஸ்ரீ மீது சாணி கலந்த நீரை ஊற்றியதுடன், அவரை அவதூறாகப் பேசி துடைப்பத்தால் தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையில் தன்னை அவமதித்ததாக ஜெயஸ்ரீ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், அபிநயா, அருணாதேவி மற்றும் பிரியா ஆகிய மூவருக்கு எதிராக காரைக்குடி வடக்கு பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரையாடல் குடும்பப் பிரச்சினையாக மாறி, பொதுவெளியில் அவமதிப்பு மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகள் வரை சென்றுள்ள இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி