பொழுதுபோக்கு

அக்கா மகனை வைத்து இயக்கும் தனுஷ்… GV இசையில் 3 பாடல்கள் ரெடி

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஜனவரியில் வெளியாகிறது. இப்படம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதையடுத்து தன்னுடைய ‘டி50’ படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் ‘டி50’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

இதையடுத்து மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள தனுஷ், தன்னுடைய அக்கா மகன் சரவணகுமாரை ஹீரோவாக்கி இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் 3 பாடல்களை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தனுஷ்

குறுகிய கால தயாரிப்பாக உருவாகிவரும் இப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. இந்தப் படம் காதல் கதையாக உருவாகி வருவதால் தனுஷ் தவிர இக்கதைக்களத்தை வேறு யாரும் படம் இயக்க முடியாது என்றும் ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய பேட்டியில் கூறியிருக்கிறார்.

தனுஷின் அக்கா மகன் சரவணகுமாருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ், சரத்குமார் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் நிறைவு செய்ய தனுஷ் திட்டமிட்டுள்ளார். இப்படத்தை தொடர்ந்தே சேகர் கம்முலா படத்தில் தனுஷ் இணையவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகவுள்ளது

(Visited 3 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content