இலங்கை செய்தி

சவேந்திர சில்வா தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணை

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி சவேந்திர சில்வா தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது இடம்பெற்ற கலவரங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் உடனடியாக உத்தரவு பிறப்பிக்கவில்லை என்பன உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த போராட்டக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட புலனாய்வுக் குழுவின் அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதையும், அதன்படி இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சட்டமா அதிபர் இரகசியப் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த குழுவின் அறிக்கையின்படி, அப்போது இராணுவத் தளபதியாக பதவி வகித்த திரு.சவேந்திர சில்வாவும் பொறுப்பேற்றுள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content