ஐரோப்பா செய்தி

போலந்தில் அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி

போலந்து நாட்டில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் இதனை தெரிவித்துள்ளார்.

போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார். அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிலைமை ஏற்படுமாயின் ஒவ்வொரு ஆணும் தயாராக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான மாதிரி திட்டம் தயாரிக்கப்படும் எனவும் ,இதன் மூலம் நாட்டு இராணுவத்தின் தயார்நிலை உறுதி செய்யப்படும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் தற்போது 1.3 மில்லியன் இராணுவ வீரர்கள் இருக்கின்றனர்.

ஆனால் போலந்து நாட்டின் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சம் ஆகும்.

தற்போதுள்ள இரண்டு இலட்சம் வீரர்களை 5 இலட்சமாக அதிகரிப்பதற்காகவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போலந்து நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி