ஆசியா

தைவானின் கிழக்குக் கடலோரப் பகுதியில் சீன போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள்

தைவானின் கிழக்குக் கடலோரப் பகுதியில் போர் விமானங்களை ஏந்திக்கொண்டு சீனப் போர்க்கப்பல்கள் சென்றுகொண்டிருந்ததைத் தமது அதிகாரிகள் பார்த்ததாக தைவானியத் பாதுகாப்பு அமைச்சு செப்டம்பர் 18ஆம் திகதியன்று தெரிவித்தது.

ஜப்பானின் தென்முனையில் உள்ள யொனாகுனித் தீவை நோக்கி அக்கப்பல்கள் சென்றுகொண்டிருந்ததாக அது கூறியது.

தைவானைத் தனது ஒரு பகுதியாக சீனா கருதுகிறது.இதைத் தைவான் ஏற்க மறுக்கிறது.

இதனால் தைவானுக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக அத்தீவைச் சுற்றி சீனா பல போர்ப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.

சீனாவுக்குச் சொந்தமான அந்தப் போர்க்கப்பல்களை தைவான் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தைவானியத் பாதுகாப்பு அமைச்சு கூறியது.

இந்த விவகாரம் குறித்து சீனா கருத்து தெரிவிக்கவில்லை.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்