பொழுதுபோக்கு

சேரன் நடிக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ இசை வெளியீடு!

இயக்குநரும், நடிகருமான சேரன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘தமிழ்க்குடிமகன்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் வெளியிட, இயக்குநர்கள் தங்கர் பச்சான், அமீர், மாரி செல்வராஜ் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

‌இயக்குநர் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தின் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’‌. இதில் சேரன், ஸ்ரீ பிரியங்கா, லால், எஸ். ஏ. சந்திரசேகர், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, துருவா, தீப்ஷிகா, அருள் தாஸ், ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ் . இசையமைத்திருக்கிறார்.

சாதியம் மற்றும் குலத்தொழில் ஆகியவற்றை மையப்படுத்தி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குந‌ர் இசக்கி கார்வண்ணன் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியாக திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இதில் தமிழ் திரையுலகின் தனித்துவமான படைப்பாளிகளாக வலம் வரும் தங்கர் பச்சான், அமீர், மாரி செல்வராஜ், பொன்வண்ணன், சரத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.

 

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content