வட அமெரிக்கா

கனடா-பிரம்டன் நகரசபை வளாகத்தில் பறந்த தமிழீழத்தேசியக்கொடி!

கனடாவில் நேற்று பிராம்டன் நகர மண்டபத்தில் தமிழீழத்தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

பிராம்டன் நகர முதல்வர் பேட்ரிக் பிரவுன் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செய்து வரலாற்று நிகழ்வை பதிவு செய்துள்ளார். தமிழீழத் தேசியக் கொடி தினத்தை முன்னிறுத்தி இந்த நிகழ்வு இடம்பெற்றது.அதேவேளை பிரம்டன் நகரசபை வளாகத்தில் தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது பதிவாகியுள்ளது.

மாவீரர்களின் குருதியாலும், மக்களின் தியாகத்தாலும் நெய்யப்பட்ட தமிழீழத் தேசியக்கொடியை உலகின் அங்கீகாரத்திற்கு எடுத்துச் செல்லும் முதற்படியாக இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

Image

இது குறித்து பேட்ரிக் பிரவுன் தனது ட்விட்டர் பக்கத்தில் ,இன்று நாம் அனைவரும் தமிழீழத் தேசியக் கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 33ஆம் ஆண்டு நிறைவை மரியாதை செலுத்தும் முகமாக பிரம்டன் நகர மண்டபத்தில் ஒன்று கூடினோம்.

இன்று மட்டுமல்ல ஒவ்வொரு நாளும், நாங்கள் கனடாவாழ் ஈழத்தமிழர்களின் எழுச்சியையும், பிரம்டன் மற்றும் கனடா முழுவதுமான எமது சமூகங்கள் அனைத்தையும் வளப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பையும் கொண்டாடுவோம்.

Image

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பையும் மனித உரிமைமீறல்களையும் தொடர்ந்துகொண்டிருக்கும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பையும் ஒரு போதும் மறக்கமாட்டோம் என பிராம்டன் நகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Image

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content