இலங்கை செய்தி

இலங்கையின் பொருளாதார மீட்சித் திட்டத்துக்கு IMF பாராட்டு

ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சொனாலி ஜெயின்-சந்திரா தலைமையிலான IMF தூதுக்குழுவினர் இன்று (30) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர்.

இதன்போது, பொருளாதார மீட்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் இலங்கையின் மீளெழுச்சித் திறன் ஆகியவற்றை நாணய நிதியத் தூதுக்குழுவினர் பாராட்டினர்.

ஜூன் 24 முதல் 30 வரை IMF தூதுக்குழுவினர் கொழும்பிற்கு மேற்கொண்ட விஜயத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்த விஜயத்தின் போது, அண்மைக்கால பேரண்டப் பொருளாதார வளர்ச்சிகள் மற்றும் நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சீர்திருத்தங்களின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது.

அரசாங்கம் பொருளாதாரத்தை வழிநடத்தும் விதம் சர்வதேச நாணய நிதியத்தின் பெரும் பாராட்டைப் பெற்றதுடன், IMF ஆதரவு திட்டங்களைச் செயல்படுத்தும் ஏனைய பல நாடுகளை விட இலங்கை அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தொடர்ச்சியான வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் சீர்திருத்தத் திட்டங்களுக்காகத் தீவிரமாக அர்ப்பணிப்புடன் இருப்பதற்கும் தூதுக்குழுவினர் அரசாங்கத்திற்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு தங்களது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் உறுதியளித்தனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் 07 ஆவது மீளாய்வின் போது, இலங்கையின் திட்டச் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக மதிப்பீடு செய்யப்படும் என்றும் தூதுக்குழுவினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின் கீழ் இலங்கை பூர்த்தி செய்ய வேண்டிய ஏனைய பொறுப்புகள் இந்த மீளாய்வுக்கு முன்னர் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள வெளிப்புற சவால்களை வெல்வதற்கும், நிதி மற்றும் வெளிப்புற ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், மீளெழுச்சித் திறனை வலுப்படுத்துவதற்கும்,

அதே போல் நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் சீர்திருத்த செயல்முறையின் வேகத்தைத் தொடர்ந்து பேணுவது இன்றியமையாதது என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதேவேளையில், பொருளாதார மீட்சியின் பலன்கள் நேரடியாக மக்களைச் சென்றடைவதுக்கு வழிவகுப்பதே அரசாங்கத்தின் இறுதி நோக்கம் என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

பொருளாதார வளர்ச்சியை, மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதில் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்காவின் வரிக் கொள்கைகள், ‘டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அழிவுகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்தச் சூழ்நிலை உள்ளிட்ட வெளிப்புற அதிர்ச்சிகளால் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை