இந்தியா உலகம் செய்தி

பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இந்தியா, அமெரிக்கா ஆராய்வு

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவை இன்று செவ்வாய்க்கிழமை மும்பையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவை இன்று செவ்வாய்க்கிழமை மும்பையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இந்தச் சந்திப்பின்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருநாட்டு மக்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

மேலும், பிராந்திய நிலவரங்கள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதாகத் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளை மேலும் முன்னேற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு குறித்து ஜெய்சங்கருடன் கலந்துரையாடியதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்கா–இந்தியா இடையிலான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் இருவரும் உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் செர்ஜியோ கோர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி