ஐரோப்பா

பிரித்தானியாவில் வாடகைக்கு குடியிருப்பவர்களா நீங்கள் : உங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர செய்தி!

பிரித்தானியாவில் வீட்டு வாடகை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு மாதத்திற்கு £1,213  ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வாடகை வீட்டொன்றின் மாதாந்த கட்டணமாக £1,199  பவுண்ட்ஸ் அறவிடப்பட்டது.  இது கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், 1.2 வீத அதிகரிப்பை குறிக்கிறது.

இந்த அதிகரிப்பானது குத்தகைதாரர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் இருவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடகைதாரர்கள் தங்கள் வாடகையைச் செலுத்த சிரமப்படுவார்கள் எனவும் வாடகை உத்தரவாதக் காப்பீட்டைக் கருத்தில் கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாடகை வீடுகளின் அடிப்படையில் பிரித்தானியாவில் லண்டனில் தான் அதிகளவு வாடகை வசூலிக்கப்படுகிறது. அங்கு குத்தகைதாரர்கள் மாதத்திற்கு £2,039  செலுத்துகிறார்கள்.

மலிவான இடம் இங்கிலாந்தின் வடகிழக்கு பகுதியில் காணப்படுகிறது. அங்கு £632 பவுண்டுகளுக்கு வீட்டினை பெற்றுக்கொள்ளலாம்.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content