செய்தி

அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியானது

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் இப்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் பலமடங்கு உயர்ந்துள்ளது.

புஷ்பா 2 கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே இரண்டாம் பாகத்தில் நடிக்க, கூடுதலாக சில நடிகர்களும் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புஷ்பா 2 படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திரிவிக்ரம் – அல்லு அர்ஜுன் கூட்டணி நான்காவது முறையாக இணையும் இந்த படத்தை அல்லு அர்ஜுனின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தமன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இது சம்மந்தமான போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

MP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி