பொழுதுபோக்கு

ஜப்பான் இல்ல ஸ்பெயின்… குட் பேட் அக்லி படக்குழுவினர் பறக்கப்போறாங்க….

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் சூட்டிங்கில் அடுத்தடுத்து பங்கேற்று வருகிறார்.

கடந்த மே மாதத்தில் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்இல் இணைந்திருந்த அஜித், ஐதராபாத்தில் முதல் கட்ட சூட்டிங்கை கடந்த மாதத்தில் நிறைவு செய்தார்.

இதையடுத்து கடந்த 24ம் தேதி விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட சூட்டியங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்தார்.

இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த மாதத்தில் மீண்டும் குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கில் மீண்டும் இணையவுள்ளார் அஜித்.

அடுத்த மாதத்தில் ஐதராபாத்தில் இந்த படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளதாகவும் வரும் செப்டம்பர் மாதத்தில் படக்குழுவினர் அடுத்த கட்ட சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த படத்தின் வெளிநாட்டு சூட்டிங் ஜப்பானில் திட்டமிடப்பட்டிருந்தது. படத்தின் அதிகமான காட்சிகள் அங்கு திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் அங்கு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் ஷூட்டிங்கில் பாதிப்பு ஏற்படும் என்று யோசித்த படக்குழுவினர் தங்களுடைய சூட்டிங் ஸ்பாட்டை ஸ்பெயினிற்கு மாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் நிறைவடைந்து அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே விடாமுயற்சி படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்