இலங்கை

பயிற்சி முகாமிலிருந்து T-56 துப்பாக்கியுடன் தலைமறைவான விமானப்படை வீரர்!

திருகோணமலை – மொரவெவ விமானப்படை முகாமில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த விமானப்படை வீரரொருவர் T-56 துப்பாக்கியுடன் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

மொரவெவ குளத்துக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியில் ஆரம்ப பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவரே நேற்று (19) மாலை காணாமல் போயுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு காணாமல் போனவர் காலி- வக்வெல்ல வீதியை சேர்ந்த 51415 எனும் விமானப்படை இலக்கமுடைய எம்.டி. கவீஷ (22) என்பவரே தலைமறைவாகியுள்ளதாகவும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த விமானப்படை வீரர் துப்பாக்கியுடன் காணாமல் போய் உள்ளதாக மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்முறைப்பாடு தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்