ஆசியா செய்தி

இலங்கை அணி வீரர்களுக்கு உணவு சமைத்து கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள்

இலங்கையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்காக வந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியினர், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் விஷேட உணவு வகைகளை தயார் செய்ய நடவடிக்கை எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் சூப்பர் ஸ்டார்களான ரஷீத் கான் மற்றும் யாமின் அகமட்ஸாய் இந்த உணவை தயார் செய்திருந்தனர்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி பதிவு செய்த வீடியோ ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ Youtube சேனலிலும் வெளியிடப்பட்டது.

இந்த உணவு “சின்வாரி ரோஷ் அல்லது மட்டன் ரோஷ்” என்று அழைக்கப்பட்டது, இது பாகிஸ்தானில் பிரபலமான உணவாகும்.

உணவை தயாரித்த பின்னர் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை வீரர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன் பிரார்த்தனை செய்தது.

உணவை ரசித்துக்கொண்டிருக்கும் போது, இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னா, தான் இதற்கு முன்பு ஆட்டிறைச்சி சாப்பிட்டேன், இது ஒரு சிறப்பு உணவு என்று கூறினார்.

இதேவேளை, இலங்கை அணித்தலைவர் தசுன் ஷனகாவும் தான் முதன்முறையாக இந்த உணவை உண்பதாகவும், அதனை ரசித்ததாகவும், ஆப்கானிஸ்தான் அணியுடன் நட்புறவின் தருணத்தை பகிர்ந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி