ராசிபலன்

ராசியின் நன்மைகள்

மேஷம் -ராசி:
உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் அனுகூலம் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

அஸ்வினி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம் ராசி:
குழந்தைகளின் வழியில் கலகலப்பான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கேளிக்கை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

கிருத்திகை : கலகலப்பான நாள்.
ரோகிணி : அறிமுகம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : நெருக்கடிகள் குறையும்.

மிதுனம் -ராசி:
கால்நடை தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈர்ப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிக்கல்கள் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : அனுபவம் கிடைக்கும்.
புனர்பூசம் : ஆர்வமின்மை உண்டாகும்.

கடகம் -ராசி:
தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். செல்வச் சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சிந்தனையின் போக்கில் இருந்துவந்த குழப்பம் விலகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
ஆயில்யம் : தாமதங்கள் குறையும்.

சிம்மம் -ராசி:
கற்றல் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பேச்சுத் திறமைகளின் மூலம் புதிய வாய்ப்புகள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நிறைவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

மகம் : மேன்மை உண்டாகும்.
பூரம் : வாய்ப்புகள் ஏற்படும்.
உத்திரம் : குழப்பம் விலகும்.

கன்னி -ராசி:
உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். சமூக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் அமையும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். பொறாமை குறையும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
அஸ்தம் : மதிப்பளித்து செயல்படவும்.
சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.

துலாம் -ராசி:
மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். களிப்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

சித்திரை : கட்டுப்பாடுகள் விலகும்.
சுவாதி : புரிதல் ஏற்படும்.
விசாகம் : கவனம் வேண்டும்.

விருச்சிகம்- ராசி:
சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சபை நிமிர்த்தமான பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மற்றும் புகழ் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். செல்வாக்கு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அனுஷம் : அனுகூலமான நாள்.
கேட்டை : கருத்து வேறுபாடுகள் விலகும்.

தனுசு -ராசி:
உறவினர்களின் வழியில் உதவி கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணங்கள் மேம்படும். செய்கின்ற முயற்சியில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். விருத்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

மூலம் : உதவி கிடைக்கும்.
பூராடம் : துரிதம் உண்டாகும்.
உத்திராடம் : லாபம் மேம்படும்.

மகரம் -ராசி:
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.

உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.
அவிட்டம் : பயணங்கள் சாதகமாகும்.

கும்பம் -ராசி.
கணவன், மனைவிக்கிடையே வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்து செயல்படவும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வர்த்தக பணிகளில் முதலீடுகளை குறைத்து கொள்ளவும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

அவிட்டம் : புரிதல் ஏற்படும்.
சதயம் : ஏற்ற, இறக்கமான நாள்.
பூரட்டாதி : ஆர்வமின்மை ஏற்படும்.

மீனம் -ராசி:
வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்பாராத உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களில் மாற்றமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

(Visited 2 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ராசிபலன்

இன்று உங்கள் ராசியின் அதிர்ஷ்டம்

மேஷம் -ராசி: முக்கியமான முடிவினை எடுக்கும் பொழுது ஆலோசனைகளை பெறவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில்
ராசிபலன்

கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம்

மேஷம் -ராசி: கலை சார்ந்த பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பதற்றமான சூழ்நிலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும்

You cannot copy content of this page

Skip to content