இலங்கை

விபத்தில் உயிரிழந்த பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் அகிலேந்திரனுக்கு அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் மாஞ்சோலை வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறீலங்கா ஜனரஜ சுகாதார சேவைப் சங்கத்தின் தலைவர் கஜேந்திரன் தலைமையில் குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று (30.03.2024) பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உதவி பணிப்பாளர் வைத்தியர் தஞ்சயன் மற்றும் வைத்தியர்கள், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்க தாதியர் உத்தியோகத்தர் சங்கம், பணியாளர்கள், ஊழியர்கள், என பலரும் விபத்தில் உயிரிழந்த வைத்தியர் கு.அகிலேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் அஞ்சலி உரையும் இடம்பெற்றிருந்தது.

முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் கடந்த 28.03.2024 அன்று ஓமந்தையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்