செய்தி

மத்திய சீனாவில் குடியிருப்பு பகுதியில் பாரிய தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி!

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று காலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

சாங்ஜியாஜி நகரின் சாங்ஜி கவுண்டியில் உள்ள 5 மாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் இன்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 7 பேரின் உடல்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரிய வரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி