வட அமெரிக்கா

அமெரிக்காவில் 19அடி நீளமான மலைப்பாம்பை பிடித்த வீரர்!

சுமார் 19 அடி நீளமுடைய மலைப்பாம்பை பிடித்த வீரர் ஒருவர் தனது அனுபவத்தை வீடியோ காட்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த பாம்பு பிடிக்கும் வீரர் ஜேக் வலேரி 19 அடி நீளமான மலைப் பாம்பைப் பிடிக்க அதனுடன் கட்டிப் புரண்டுள்ளார்.எத்தனையோ பாம்புகளைப் பிடித்து இருந்த போதும் இந்த ஒருபாம்பு மட்டும்தான் தமக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

பாம்பை விட்டு விடக்கூடாது என்று அதன் தலைப்பகுதியை இறுக்கிப் பிடித்து கட்டுக்குள் கொண்டு வரப் போராடியதாக கூறியுள்ளார்.இந்தப் போராட்டத்தை ஜேக்கின் நண்பர்கள் வீடியோ படம் எடுத்ததாவும் சிலர் அவருக்கு உதவ முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேக்கின் தோழி ஒருவர் உடனடியாக காரில் இருந்த டேப்பை கொண்டு வந்து மலைப்பாம்பின் வாயை மூடி சீல் வைத்த பின்னர் பாம்பைப் பிடிக்கும் முயற்சி கைகூடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்